"என் பேச்சு உங்கள் முன் வரும் போது நான் கைதாகி இருப்பேன்" - தீயாய் பரவும் இம்ரான்கான் வீடியோ
கைதாவதற்கு முன்பு இம்ரான் கான் பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இம்ரான் கான், இந்த பேச்சு வந்து சேர்வதற்குள், சட்டத்திற்கு புறம்பான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பேன் என கூறியுள்ளார். இதன் பின்னர் அடிப்படை உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை புதைக்கப்பட்டு விட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மக்களை மீண்டும் சந்தித்து பேச முடியாமலும் போகலாம் என்றும், இம்ரான்கான் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
Next Story