அதிர வைக்கும் கைரேகை அறுவை சிகிச்சை..புதிய கைரேகை..புதிய விசா..வெளியான பகீர் தகவல்
கைரேகை அறுவை சிகிச்சை செய்து குவைத்திற்கு விசா பெற உதவியவர்கள் தெலங்கானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
குற்ற வழக்குகளால் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் மீண்டும் அந்நாட்டிற்குள் சென்று வேலை பார்க்க கைரேகை மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கைவிரலின் நுனிப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து திசுவின் ஒரு பகுதியை அகற்றி விட்டு தையல் போடப்படுகிறது.
இந்த மாறுபட்ட கைரேகை ஓராண்டு வரை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் ஆதார் அட்டையை மறுபதிவு செய்து, புதிய முகவரியுடன் குவைத்திற்கு செல்ல சிலர் விண்ணப்பிக்கின்றனர்.
தெலங்கானாவில் நடந்த தேடுதல் வேட்டையில் எக்ஸ்ரே நிபுணர், மயக்க மருந்தியல் பிரிவு ஊழியர், குவைத்தில் கட்டுமான தொழிலாளர்களாக உள்ள இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குவைத்திற்கு செல்ல முயன்ற இருவரும் போலீசில் பிடிபட்ட நிலையில், இதுவரை 11 பேர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி கைரேகை அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.