"யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்" - அமீர்கான்
மனதளவில் காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என இணையத்தில் எதிர்ப்பு வலுத்தது குறித்து பதிலளித்த அவர், தான் யார் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார். லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க நினைப்பவர்களின் முடிவை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story