Bestie -யுடன் கடலை போட்ட கணவன்... கண்டித்த மனைவியை துடிதுடிக்க கொன்று வாயில் விஷத்தை ஊற்றி நாடகமாடிய குடும்பம் - சோகத்தில் முடிந்த கல்லூரி கல்யாணம்

x

Bestie -யுடன் கடலை போட்ட கணவன்... கண்டித்த மனைவியை துடிதுடிக்க கொன்று வாயில் விஷத்தை ஊற்றி நாடகமாடிய குடும்பம் - சோகத்தில் முடிந்த கல்லூரி கல்யாணம்

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமணி. 20 வயதான இவரும், சஜ்சய் என்ற இளைஞரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில், ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இளைஞரின் வீட்டிலேயே மாணவி தங்கியிருக்கிறார். இதனிடையே, கல்லூரியில் படிக்கும் வேறொரு மாணவியிடம் சஞ்சய் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததால், இளம் ஜோடிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்து இளைஞர் தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த இளைஞரின் பெற்றோர், மருமகள் தற்கொலை செய்து கொண்டது போல் அவருடைய வாயில் விஷத்தை ஊற்றி நாடகமாடியுள்ளனர். மகளின் இறப்பில் சந்தேகமிருப்பதாக கூறி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், சந்தேகமரணம் என வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சஞ்சய் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், சஞ்சய் மற்றும் அவருடைய தந்தை லட்சுமணன், தாய் பக்ருநிஷா அகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்