சித்தி உடன் தகாத உறவு...வெறி தீர வெட்டிய இளைஞர்கள் - வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்
சிவகாசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர் கடந்த 3ம் தேதி, 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த, சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சாமுவேல், வீரபுத்திரன், கண்ணன், ஆனந்த், கிருஷ்ண குமார் ஆகிய 5 இளைஞர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சாமுவேலின் சித்தி உடன், சுந்தரபாண்டியன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், பல முறை கண்டித்தும் சுந்தரபாண்டியன் கேட்காததால் சாமுவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.