மனைவியின் முன்னாள் காதலனை கொன்ற கணவன்... கணவன், மைத்துனர்கள் திட்டம் தீட்டியது அம்பலம்
ஆவடி அடுத்த மோரை அருகே வேளச்சேரி பகுதியை சேர்ந்த ராகவி என்பவர், தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன், முன்னாள் காதலன் சுதாசந்தர் என்பவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வில்லிவாக்கம் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுதாசந்தரை, மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ஆட்டோவைக் கண்டறிந்து அதன் ஓட்டுனரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண்ணின் கணவர் வசந்த், பெண்ணின் சகோதரர்கள் ராபின், உதயராஜ், உறவினரான சுஷ்மிதா ஆகிய 4 பேர் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.