"வீடியோ எடுத்து நெட்-ல போட்ருவேன்"- Bestie-யிடம் கெத்துக் காட்ட எகிறிய 2K கிட் -போலீஸ் செஞ்ச சம்பவம்

x

லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி வந்ததுடன், அபராதம் கேட்ட காவலரை வீடியோ எடுத்து வெளியிட்டு விடுவதாக 2கே கிட் ஒருவர் மிரட்டிய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது...

அண்ணா சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்...

அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தனது Bestieயோடு தலைக்கவசம் கூட அணியாமல் கூலாக வந்த 2கே கிட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர்...

லைசென்சும் இல்லை... ஹெல்மெட்டும் இல்லை என்பதால் அந்த இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்...

உடனே கொதித்தெழுந்த அந்த 2கே கிட்டும், அவரது bestieயும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவீர்கள் என்று மிதப்பில் பேசிய அந்த 2 கே கிட்டிற்கு பாடம் புகட்ட எண்ணிய போலீசார், "பைக் ஓட்டத் தெரிஞ்ச உனக்கு...

லைசன்ஸ் இருந்தா தான் அதை ரோட்டுல ஓட்டணும்னு தெரியலையே" என்று போலீசார் அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போது, காவல்துறையினரை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி விடுவேன் என்று அந்த 2கே கிட் ஆவேசமாக பேசியது அவரது அறியாமையை வெளிப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்