"கலெக்ட்டர் கிட்ட தான் குடுப்பேன்"அழுது அடம் பிடித்த பெண்-குண்டு கட்டாக தூக்கிசென்ற போலீசார்

x

சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண் ஒருவர், தனது புகாரை ஆட்சியரிடம் மட்டுமே கொடுப்பேன் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் அருகே தெற்காடு பகுதியைச் சேர்ந்த கந்தம்மாள் என்பவர், ஆட்சியர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அந்த பெண்ணின் கோரிக்கை குறித்து போலீசார் கேட்ட போது, தான் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே, தனது கோரிக்கையை ஆட்சியரிடம் மட்டுமே கொடுப்பேன் என்றார். பின்னர், வட்டாட்சியர் ஒருவர் வந்து விசாரித்த போதும், காந்தம்மாள் மறுப்பு தெரிவித்ததால், போலீசார் அவரை குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்