ஐஎஃப்எஸ், ஹிஜாவு மோசடி வழக்கை விசாரிக்க புதிய அதிகாரிகள் நியமனம்..!
ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடியில், நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் விசாரணை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களின் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மோசடி செய்தது. இந்த மோசடி சம்பவத்தை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த ரகுபதி என்பவரும் மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக ஏடி.எஸ்.பி கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story