விதிகளை மீறி பேனர்கள் வைத்தால்..3 வருட சிறை தண்டனை..எச்சரிக்கை விடுத்த நகராட்சி நிர்வாகத்துறை
விதிகளை மீறி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்றும், உரிமக்காலம் முடிந்த பின்பும், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதாகை வைப்பது தொடர்பாக விதிகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், உள்ளிட்டோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது 25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படும் எனவும், நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....
Next Story