"கஞ்சா அடித்தால் பெரிய ரவுடியா" ஊர் கூடி அடி, உதை.."ஐயோ அம்மா, அண்ணா விட்ருங்க" - கதறிய கஞ்சா GUYS
காஞ்சிபுரத்தில், அதீத கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில், ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 7 பேரை, அப்பகுதி மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த 7 பேரும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 7 பேருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள், 7 பேரில் 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மீதமிருந்த 4 பேரையும், போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பெருங்களத்தூரை சேர்ந்த நடராஜன், சிறுமாத்தூரை சேர்ந்த ஐயப்பன் படப்பையை சேர்ந்த விக்னேஷ் சென்னையை சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது.
Next Story