"குவாட்டர் கொடுத்தா வரேன்..அதுவும் தலை வலி வராத சரக்கு தான் வேணுமாம்"போதை ஏறி..நடுரோட்டில் பெண் அட்டகாசம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் - திருப்பூர் பிரதான சாலையில் குடிபோதையில் அரசு பேருந்தை நிறுத்தி அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடியபடியும் இருந்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசாரிடம், அந்தப் பெண் அரசு பேருந்தை நிறுத்தி, அதன் மீது ஹாயாக சாய்ந்து கொண்டார். பின்னர் அந்த வழியாக சென்ற காரை மடக்கியவர், சாவியை எடுத்து கொண்டார். போலீசாரையும் கையை பிடித்து இழுத்து வசை பாடினார். பின் போலீசாரிடம், எனக்கு குவாட்டர் கொடுத்தால் தான் வருவேன் எனவும், தலை வலி வராத எக்ஸ்பிரஸ் ரக பிராந்தி தான் வேண்டும் என அடம்பிடித்தார். இதனால் தவித்த போலீஸார், பின்
அவரை ஒருவழியாக சமாதானம் செய்து, குவாட்டர் வாங்கி வர சொல்ல, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அப்பெண், திருப்பூர் கலைஞர் நகரை சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இது போல கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் பெண் போலீசார் அவரை நன்கு கவனித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.