"நீ கடிச்சா.. நானும் கடிப்பேன்" - கோபத்தில் பாம்பைக் கடித்துக் குதறிய குழந்தை!
தன்னைக் கடித்த 20 இஞ்ச் நீள பாம்பை இரண்டரை வயது பெண் குழந்தை பல்லால் கடித்துக் கொலை செய்த சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது... குழந்தையின் வாயில் பாம்பு கடித்த நிலையில், வலியைப் பொறுக்க முடியாமல் பாம்பைப் பிடித்து அந்தக் குழந்தை தனது பல்லால் கடித்துக் குதறியுள்ளது... அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்த போது... "பற்களுக்கிடையில் பாம்புடன்" சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார்... இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் குதறப்பட்டு இறந்த பாம்பு விஷமற்றது என்பது தான்... தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல்நலனில் எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....
Next Story