"PS1-ல் ரஜினி நடித்திருந்தால் கதை மாறியிருக்கும்" - இயக்குநர் மணிரத்னம் தகவல்
ரஜினியை வைத்து பழுவேட்டரையர் கதையை தனியாக எடுக்கலாம் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
வார இதழுக்கு அளித்த பேட்டியில், பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையராக ரஜினியை நடிக்க வைத்திருந்தால், கதையை மாற்ற வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.
ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தள்ளிவைத்துவிட்டு படம் எடுக்க முடியாது எனவும் மணிரத்னம் தெளிவுப்படுத்தினார்.
பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையராக நடிக்க ஆசைப்பட்டதாக ரஜினி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story