"தர தவறினால்.." - டிவிட்டரை மிரட்டும் எலான் மஸ்க்..

"தர தவறினால்.." - டிவிட்டரை மிரட்டும் எலான் மஸ்க்..
x

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலக போவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். உலகின் பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் ஒப்பந்தம் போட்டார். 44 பில்லியன் டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். எலான் மஸ்க்கிற்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் மறைமுகமான சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலக போவதாக கூறியுள்ளார்.போலி பயனர் கணக்குகள் குறித்த தகவல்களை டிவிட்டர் தர தவறினால் ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடுவேன் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்