சென்னை வீட்டில் இருந்த 3 கடவுள்கள் - அதிர்ந்துபோன அதிகாரிகள்
சென்னையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஆண்டுகள் பழமையான 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
இந்திய தொல்லியல் துறையில் பழங்கால சிலைகளை பதிவு செய்திருக்கக் கூடிய நபர்களின் விவரங்களை சேகரித்தபோது, சென்னை ஆர்.ஏ. புரம் பகுதியை சேர்ந்த சோபா துரைராஜன் என்பவர், பழங்கால சிலைகளை பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அந்த வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆதிகேச பெருமாள் சிலை, ஸ்ரீதேவி, பூதேவி சிலை, அஸ்திர தேவர் சிலை, அம்மன் சிலை, வீரபத்ர அம்மன் சிலை, மகாதேவி ஆகிய 7 பழங்கால சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகளில், விஷ்ணு சிலை மற்றும் ஸ்ரீதேவி சிலைகள், உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மற்ற சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.