"முற்றுப்புள்ளி வைப்பேன்" - சசிகலா பரபரப்பு அறிக்கை
"முற்றுப்புள்ளி வைப்பேன்" - சசிகலா பரபரப்பு அறிக்கை
அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்பதால், தன் மீது வீண்பழி சுமத்தி வாயை அடைக்க முயல்வதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், தான் ஓயப்போவது இல்லை எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
Next Story