"பாட்டி வந்தா தான் ஆம்புலன்ஸில் ஏறுவேன்".. விபத்தில் சிக்கிய இளைஞர் அடம் - செய்வதறியாது நின்ற போலீஸ்
சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் மதுபோதையில் காரின் மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு மருத்துவமனைக்கு செல்ல மறுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகாஷ் என்ற அந்த இளைஞரை, போலீசார் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, மதுபோதையில் இருந்த ஆகாஷ், ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததுடன், போலீசாரிடம் தனது பாட்டி வந்தால்தான் மருத்துவமனைக்கு செல்வேன் என்று கூறியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story