"வன்கொடுமைக்குள்ளான பெண்களை சந்தித்தே தீருவேன்.. " - "பிரதமர் உடனே மணிப்பூர் வர வேண்டும்"

x

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்து நேரில் ஆய்வு செய்ய, தடையை மீறி, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், இம்பால் சென்றடைந்தார்

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சுவாதி மாலிவாலுக்கு

அம்மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில், தடையை மீறி அவர் மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாதி மாலிவால்,

மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கை நேரில் சந்திக்க இருப்பதாகவும், வன்கொடுமைக்கு ஆளான பெண்களை சந்தித்து, அவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிவாரணம் கிடைக்கப்பெற்றதா ? என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். இங்கே அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், பிரதமர் மோடி மற்றும் மத்திய பெண்கள் நல அமைச்சர் ஸ்மித்திரானி ஆகியோர், மணிப்பூர் வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்