"மசூதிக்கு குண்டு வைப்பேன்.." - சேலத்தை அலற விட்ட நபர்... விசாரணையில் வெளிவந்த தகவல்

x

சேலம் அருகே கணவன் மனைவி பிரச்சனையில், மசூதிக்கு குண்டு வைத்து தகர்ப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தவர், கைது செய்யப்பட்டார்.


சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி ராமகிருஷ்ணனும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரான பர்வீன் பானு என்பவருக்கும் காதலித்து, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ராமகிருஷ்ணன் மதுபோதைக்கு அடிமையானதால், இருவரும் 4 ஆண்டுகளாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி பர்வீன் பானுவை சந்தித்த ராமகிருஷ்ணன், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால்,ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள மசூதிக்கு பெட்ரோல் குண்டு வீசப்போவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசி இருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்