"தாய், தந்தையை பார்க்க வேண்டும்.." ஒரு நாள் பரோலில் கைதி செய்த காரியம் - ஷாக் ஆன போலீசார்
பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று கூறி பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, தப்பி ஓடி மீண்டும் போலீசிடம் பிடிபட்ட நிலையில், கள் குடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான், தான் பரோலில் வந்ததாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ராஜக்காடு பொன்முடியைச் சேர்ந்தவர் களப்புரைல் ஜோமோன். கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் தனது வயதான பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று பல முறை பரோல் விண்ணிப்பித்திருந்தார். இறுதியாக ஒரு நாள் மட்டும் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஜோமோன் நேற்று முன் தினம் அழைத்து வரப்பட்டார். வீட்டிற்குள் செல்லும் போது, போலீசாரை தள்ளி விட்டு அருகில் இருந்த வனப்பகுக்குள் தப்பி ஓடிய ஜோமோனை போலீசார் துரத்திப் பிடித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கள் குடிக்க வேண்டும் என்ற ஆசையில் பரோல் கேட்டு வந்து தப்பி சென்றதாக ஜோமோன் தெரிவித்த நிலையில், காவலர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தனர். முன்பே இவருக்கு பரோல் வழங்கக்கூடாது என போலீசார் அறிக்கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.