"என் கணவன் முகத்த கடைசியா ஒரு தடவையாவது பாக்கணும்" - கலெக்டரிடம் கதறிய மனைவி
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வரக் கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்
திருமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த செல்வத்திற்கு திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், குடும்ப வறுமை காரணமாக அவர் சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தெய்வானையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட செல்வத்தின் நண்பர், செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால், இதுவரை செல்வத்தின் உடல் இந்தியா கொண்டு வரப்படாததால், தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தெய்வானை, கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
Next Story