"எல்லையில் நாட்டையே காப்பாத்துனேன்.. ஆனா மனைவிய காப்பாத்த முடியலயே" - மணிப்பூர் வீடியோ.. பெண்ணின் கணவன் கதறல்
மணிப்பூரில் வன்முறையாளர்களால் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என தெரியவந்துள்ளது. நாட்டையே உலுக்கிய வீடியோ குறித்து கதறும் முன்னாள் ராணுவ வீரர், கார்கில் போரில் நாட்டை காப்பாற்றினேன், ஆனால் மனைவியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என வேதனை தெரிவித்துள்ளார். கிராமத்தை வன்முறையாளர்கள் தாக்கிய போது உயிர் தப்பிக்க குடும்பத்தோடு வெளியேறினோம், நெருக்கடியில் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறும் ராணுவ வீரர், கார்கில் எல்லையை விடவும் தமது கிராமம் மிகவும் ஆபத்தாக உள்ளது என கவலை தெரிவித்துள்ளார். நாட்டை காப்பாற்றிய தன்னால் சொந்த கிராமத்தையும், கட்டிய மனைவியையும் காப்பற்ற முடியாமல் போய்விட்டதே என துயரத்தில் ஆழ்ந்துள்ளார். பெண்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு போலீசார் இருந்தனர் என குற்றம் சாட்டும் முன்னாள் ராணுவ வீரர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.