ஜெய்பீம் படத்தை போல சித்ரவதை அனுபவித்தேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலை மூட நம்பிக்கையை விதைக்க கூடாது, முற்போக்கு எண்ணங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முத்தமிழ் பேரவையின் 41-ம் ஆண்டு இசை விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜரத்தின அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேலுக்கு இயற்செல்வம் விருது வழங்கி முதல்வர் கவுரவித்தார். "இசை செல்வம் விருது - மகாகவி பாரதியின் கொள்ளு பேரன் ராஜ்குமார்பாரதிக்கும், நாட்டியாச்சார்யா பத்மபூஷன் V.P. தனஞ்சயன், பத்மபூஷன் சாந்தா தனஞ்சயன் " ஆகிய இருவருக்கு "நாட்டிய செல்வம்" விருதும் வழங்கப்பட்டது. நாகேஷ் பப்பநாடுவிற்கு "நாதஸ்வர செல்வம் ' விருதும், "தவில் செல்வம் " விருது - திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் சுபானி பத்மஸ்ரீ காலீ ஷா பி மெஹபூப் ' நாதஸ்வர தம்பதிக்கு சிறப்பு விருதாக "ராஜ ரத்னா " விருதை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படம், ஜெய்பீம் என்றும், அதில் வரும் சிறைச்சாலை சித்ரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன் என்றும் கூறினார்