"உன்னோட பணம் ஒன்னு எனக்கு வேணாம்.." EX மனைவியின் அபராத பணத்தை தானமாக கொடுத்த Captain Jack Sparrow
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது மனைவி வழங்க இருக்கும் இழப்பீட்டு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். அவரது கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில்,அந்த கதாபாத்திரத்திற்கென பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை.
பின்னர் அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஜானி டெப். அந்த வாழ்கையும் தொடரவில்லை, அவரையும் தற்போது விவாகரத்து செய்துள்ளார்.கடந்த 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் தான் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறி ஜானி டெப்பின் மீது குற்றம்சாட்டியிருந்ததோடு, அவதூறு வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்த நிலையில்,
இது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பியதற்காக ஆம்பர் அவரது முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு இழப்பீடாக 10 மில்லியன் டாலரும், அபராதமாக 5 மில்லியன் டாலரும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இறுதியில் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுத்து மொத்த வழக்கையும் முடித்து கொள்வதாக மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவித்தார்.
இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நடிகர் ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயின்டட் டர்ட்டில்', 'ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' ஆகிய ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.