பெயர் மாற்றப்பட்ட அவ்வை சண்முகம் சாலை... "இதில் உள்ள அரசியல் எனக்கு புரியவில்லை" - டிகேஎஸ். கலைவாணர்
அப்போது மேடையில் பேசிய அவ்வை சண்முகத்தின் மகன் டிகேஎஸ். கலைவாணர், அவ்வை சண்முகம் சாலைக்கு"VP.ராமன் சாலை" என பெயர் சூட்டப்பட்ட நிலையில், பெயர் மாற்றத்தில் என்ன அரசியல் உள்ளது என்பது தனக்கு புரியவில்லை என்று தெரிவித்தார். மேலும், தேவ நேய பாவாணர் நூலகத்தில் அவ்வை சண்முகம் அரங்கம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாகவும் டிகேஎஸ். கலைவாணர் தெரிவித்தார். இந்நிகழ்வில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாடக நடிகர் இயக்குனர் மவுலி, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story