"நேத்து 7 மணி வரை கிடைக்கும்னு நம்பல""தல தோனி-ய பாத்தாலே போதும்; கடவுள பாத்த மாதிரி"

x

TNPL தொடரில் பட்டைய கிளப்பி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் IPL தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது . அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான 41வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, போட்டி நடத்தப்பட்டது. ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் சரியான பதில் அளித்த 13 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 12 பேர் தலா 2 டிக்கெட்டுகளையும் ஒருவர் 1 டிக்கெட்டையும் தட்டிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்