"இனி இத ஓட்ட முடியாது..."- பயணிகளை இறக்கி விட்ட ஓட்டுநர்
இயக்குவதற்கு லாயக்கற்ற பேருந்து எனக்கூறி, ஆட்சியரிடம் பேருந்தை ஒப்படைக்க ஓட்டுநர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன், கடந்த 14-ம் தேதி அன்று அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
அந்த பேருந்து, இயக்குவதற்கு லாயக்கற்றது என்று கூறி, பயணிகளை இறக்கி விட்டபின், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்று நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அதிகாரிகள் அனுமதி இல்லாமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, ஓட்டுனர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
Next Story