"Google Pay நம்பர் சொல்லுறேன்..திருப்தியா இருந்தா பணம் கொடுங்க" - தீயாய் பரவும் ஆடியோ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக கட்டிய வீட்டிற்கு தீர்வை கட்டுவதற்கு, நகராட்சி பில் கலெக்டர் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு, புதிய கதவு எண் வீட்டு தீர்வை கட்டுவதற்கு, மாரியப்பன் என்பவரிடம் நகராட்சி பில் கலெக்டர் அந்தோனிராஜ், லஞ்சமாக 20 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும், அதனை கூகுல்பே மூலமே அனுப்ப வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் செல்போனில் உரையாடும் ஆடியோ வெளியாகியுள்ளது.
Next Story