"அம்மா போல நானும்.." - முதல் உரையில் ராணியின் மகன் உருக்கமான பேச்சு

x

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதையடுத்து, பாரம்பரிய வழக்கப்படி எலிசபெத் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், பட்டத்து இளவரசருமான 73 வயது சார்லஸ், இங்கிலாந்தின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். சுமார் 7 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், கடந்த ஆண்டு மறைந்த தனது தந்தை பிலிப், தற்போது மறைந்த தாயார் எலிசபெத் ஆகியோரை நினைவு கூர்ந்தார். கடந்த 1947-ஆம் ஆண்டு, ராணி எலிசபெத் தனது 21-ஆவது பிறந்த நாளில், தனது வாழ்வை நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாகக் கூறியதை தனது உரையில் குறிப்பிட்ட சார்லஸ், அதேபோன்று கடவுள் தனக்கு அளிக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற இருப்பதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்