மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு அப்படியே ஸ்டேஷன் சென்ற கணவன்
நாமக்கல் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே சூரைச் சேர்ந்த தம்பதி ராஜா-பிரமிளா. பிரமிளா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர்கள் கணவன் மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ராஜா, தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனது மனைவி மரணமடைந்ததை உணர்ந்த ராஜா, போலீசாரிடம் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story