"சேர்ந்து வாழலாம் வா.." கணவன் கல்லால் அடித்து கொலை - மனைவி நிகழ்த்திய பயங்கரம்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, குடும்பத் தகராறில் சமாதானம் பேச வந்த கணவனை, மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சங்ககிரி ஒன்றியம் மோரூர் பகுதியை சேர்ந்த தனபால் - சரிதா தம்பதிக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால், கடந்த மூன்று ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், சமரசம் பேசி மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு தனபால் வந்துள்ளார். அப்போது மனைவி, மைத்துனர், மாமனார், மாமியார் ஆகிய 4 பேரும் சேர்ந்து, தனபாலை தலையில் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மயங்கி விழுந்த தனபாலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தபோது, வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சரிதா மற்றும் அவரது குடும்பத்தினர் என 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்