ஆண் நண்பருடன் பேசுவதை கண்டித்த கணவர் - மனைவி எடுத்த விபரீத முடிவு
சென்னை அண்ணா நகரில், ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
மூவேந்தர் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி புவனேஷ்வரிக்கு, ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அவருடன் அடிக்கடி செல்போனில் பேசுவதை அறிந்த சுரேஷ், ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Next Story