பட்டப்பகலில் ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை... போலீசார் தீவிர விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி- லத்தேரி இடையேயான ரயில்வே பாதையில் LG புதூர் பகுதியில் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் விரைவு ரயில் முன் பாய்ந்து அத்தம்பதி உயிரை மாய்த்துக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்கொலை செய்து கொண்டது குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் பகுதியை சேர்ந்த விவசாய தம்பதியான மோகன் - மல்லிகா என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Next Story