"சூறாவளிக் காற்று வீசக்கூடும்.." - மீனவர்களுக்கு எச்சரிக்கை | tamilnadu | rain | thanthi tv

x

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

வரும் 21,22 ஆகிய தேதிகளில், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 22ம் தேதி, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் வரும் 22ம் தேதி வரை, இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும்,

இன்று அந்தமான் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலிலும்,

நாளை தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலிலும்

வரும் 20 முதல் 22ம் தேதி வரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்