தமிழகத்தையே அதிரவைத்த மோசமான சம்பவம் - கலந்தது மலமா?.. விரைவில் ரிப்போர்ட்
புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்திருந்தது மனிதக் கழிவா அல்லது விலங்கு கழிவுகளா என்பதைக் கண்டறிய, அதன் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை செய்து உண்மைத்தன்மை இருந்தால் மட்டுமே, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story