தடுப்பணை அருகே கொட்டப்பட்ட மனித கழிவுகள்.. தனியார் நிறுவன ஊழியர்களின் அலட்சியம் -உதகை அருகே பயங்கரம்
தடுப்பணை அருகே கொட்டப்பட்ட மனித கழிவுகள்... தனியார் நிறுவன ஊழியர்களின் அலட்சியம் - உதகை அருகே பயங்கரம்
உதகை அருகே நஞ்சநாடு ஊராட்சிமன்றத்திற்கு உட்பட்ட நரிக்குழியாடா கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்... விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் இந்த கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் அருகே உள்ள சோலைகாட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து வினியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் மனித கழிவு அகற்றும் நிறுவனத்தினர் வாகனத்தில் கொண்டு சென்ற மனித கழிவுகளை தடுப்பணையின் அருகே கொட்டி உள்ளனர். அந்த கழிவுகள் தடுப்பணை குடிநீரில் கலந்துள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர்... இதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தஞ்சையைச் சேர்ந்த ரஞ்சித், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே கடந்த சில மாதங்களாகவே இது போன்று மனித கழிவுகளை தடுப்பணை பகுதியில் கொட்டி சென்றதாகவும் இதனால் அந்த கிராமத்தை சார்ந்தவர்களுக்கு உடல் நிலை பாதிக்கபட்டு வருவதாகவும் கூறும் கிராம மக்கள், தங்களுக்கு கூட்டு குடி நீர் திட்டம் மூலம் சுகாதாரமான குடி நீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.