"இனி உடலை எரிக்கவோ புதைக்கவோ வேண்டாம்" - மனித உடல்களை உரமாக மாற்ற முடிவு
மனித உடல்களை உரமாக்குவதற்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது...
ஒருவர் இறந்த பிறகு அவரது உடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யாமல் பயனுள்ள வகையில் மண்ணுக்கு உரமாக மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், வாஷிங்டன் இதை சட்டப்பூர்வமாக்கிய முதல் அமெரிக்க மாகாணமாகும்.
கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாகாணங்களும் இதைப் பின்பற்றின.
இந்நிலையில், ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மனித உரம் தயாரிக்க அனுமதிக்கும் 6வது அமெரிக்க மாகாணம் என்ற பெருமையை நியூயார்க் பெற்றுள்ளது.
Next Story