சென்னையில் பிரம்மாண்ட புதிய விமான முனையம் - முதல் விமானம் எங்கிருந்து வருகை?

x

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் கடந்த 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த ஒருங்கிணைந்த புதிய முனையம் தான் இது.

சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 கோடி பயணிகளை கையாளும் நிலையில், தற்போது 30 கோடி பயணிகளை கையாள முடியும்.

இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் 6 கண்வயர் பெல்ட்கள், 17 அதிநவீன லிப்ட்டுகள்,

17 எஸ்குலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகளை பரிசோதனை செய்ய 3 அதி நவீன கருவிகள் அமைந்துள்ளன.

இந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையம் முழு செயல்பாட்டுக்கு வந்த பிறகு தற்போதுள்ள முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும்.

இந்த புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் முதல் சோதனை ஓட்டம் வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது.

அன்று பகல் 12:55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும் பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கவுள்ளது.

அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு புதிய முனையத்தில் இருந்து டாக்காவுக்கு புறப்பட்டு செல்லும்.

அதைத்தொடர்ந்து வேறு சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும்.

ஆனால் சிறிய ரக விமானங்கள் மட்டுமே சோதனை காலங்களில் இங்கு வந்து செல்லும்.

சோதனை ஓட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், வருகின்ற மே மாதத்தில் இருந்து இந்த புதிய முனையத்தில் பெரிய ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும்.

தற்போது பழைய கட்டிடத்தில் உள்ள பன்னாட்டு வருகை பகுதி கட்டிடங்கள் உடைக்கப்பட்டு, 2ம் கட்ட ஒருங்கிணைந்த விரிவாக்க கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்