உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டாவுக்கு மிகப்பெரிய தோல்வி - மெரினா போராட்டத்துக்கு வெற்றி

x

தமிழகத்தின் பாரம்பரியம் போற்றும் ஜல்லிக்கட்டு கடந்த 2014-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தடைபட்டது. 2017-ல் தமிழகத்தில் ஏற்பட்ட தன்னெழுச்சி போராட்டம் காரணமாக மீண்டும் மதுரை மண்ணில் காளைகளும் காளையர்களும் விளையாட தொடங்கின. அப்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும் மீண்டும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடின.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கக்கூடாது - பீட்டா வாதம் கொசு கடித்தால் என்ன செய்வீர்கள் பீட்டாவுக்கு கேள்வி வழக்குகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தமிழக அரசு, பீட்டா இடையே காரசார வாதம் நடைபெற்றத். நவம்பர் மாதம் விசாரணையில் விலங்குகளுக்கும் உரிமைகள் உண்டு என்றது பீட்டா .

அப்போது மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என குறிபிட்ட நீதிபதி ஜோசப், கடிக்கும் கொசுவை அடித்துவிட்டால், விலங்குகள் வதை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என கேள்வியை எழுப்பியிருந்தார்.ஜல்லிக்கட்டு கலாசாரம் கொண்டது- தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் - மத்திய அரசு ஆதரவு

தமிழக அரசு வாதிடுகையில் காளைகள் பாதுகாப்பு குறித்து பேச பீட்டாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்றது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய தமிழக விளையாட்டு என்ற தமிழக அரசு, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு பிறகு விதிமீறல் புகார்கள் எதுவும் கிடையாது, நீதிபதிகள் போட்டியை காண வரவேண்டும் என அழைத்தது. ஜல்லிக்கட்டு சட்டத்தில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. வாதம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. பீட்டா வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு "சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது" "ஜல்லிக்கட்டு - இனி நீதிமன்றம் தலையிடாது" பீட்டா மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது வழக்குகள் தள்ளுபடி - தமிழகத்தில் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததுடன், ஜல்லிக்கட்டு போட்டி பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் குறிப்பிட்டது. விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 2017-ல் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து சட்டம் கொண்டுவந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நாயகனாக பார்க்கப்பட்டார். தீர்ப்பு குறித்து அவர் பேசுகையில், தீர்ப்பு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இது தமிழக மக்களுக்கு கிடைத்த தீர்ப்பு என நெகிழ்ந்தார்.

ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்

  • "உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது"
  • "உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது"
  • "ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவர பிரதமர் மோடி உதவினார்"
  • "உச்சநீதிமன்ற தீர்ப்பு - தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி"

தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்

  • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
  • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை...
  • ஜல்லிக்கட்டு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
  • "ஜல்லிக்கட்டு பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நீதிமன்றம் தலையிடாது"
  • விலங்குகள் நல வாரியம், பீட்டா மனுக்களை தள்ளுபடி செய்தது

Next Story

மேலும் செய்திகள்