தாஜ்மஹாலில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் - அலறும் சுற்றுலா பணிகள்

x

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மஹாலில், குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வரும் பயணிகளை குரங்குகள் தாக்குவது, பயமுறுத்தவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கடந்த 6 மாதங்களில், மட்டும் சுமார் 12 சுற்றுலாப் பயணிகளை குரங்களுகள் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தடுக்கும் விதமாக,தாஜ்மஹாலில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து கருத்தடை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தம் 10 ஆயிரம் குரங்குகளை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிகளுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை செலவாகும் எனவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்