புதிய வகை ஒமிக்ரான் BF.7 தாக்கம் எப்படி இருக்கும்? - டாக்டர் சொன்ன தகவல்
சீனாவில் பரவும் ஒமிக்ரான் BF.7 உருமாறிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக பீதியடைய வேண்டாம் என மருத்துவர் அமலோற்பவநாதன் அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் பரவும் வைரஸ் உயிர்க்கொல்லியாக தெரியவில்லை, அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆக்சிஜன் தேவை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், வழக்கமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையே போதுமானது எனவும் அமலோற்பவநாதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Next Story