யாருக்கு எவ்வளவு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ? முக்கிய அறிவிப்புகள் |UNION BUDGET 2023

x

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், அதில் சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

புதிய வருமான வரி திட்டத்தின் படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் 62 ஆயிரத்து 500 வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என தெரிகிறது. தொழில் செய்து மாதம் 58 ஆயிரத்து 250 வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் பழைய வருமான வரி திட்டத்தின் படி 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 5 சதவீதம் வரியும், 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 10 சதவீதம் வரியும்,

9 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்கள் 15 சதவீதம் வரியும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 20 சதவீதம் வரியும் , 15 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 30 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்