2 வயது குழந்தையின் உயிரை பறித்த வெந்நீர்..கடலூரில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, குளிப்பதற்காக வைத்த வெந்நீர் கொட்டியதில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் - கனிமொழி தம்பதியின் ஒன்றரை வயது மகன் கவின், விளையாடிக் கொண்டிருந்த போது, குளிப்பதற்காக வைக்கப்பட்ட வெந்நீர், எதிர்பாராத விதமாக குழந்தையின் உடல் மீது கொட்டியது. இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Next Story