தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்! |
ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாசரின் 535-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி குறும்பர் இன மக்கள் தங்களது குல தெய்வங்களை தலை மேல் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story