மருத்துவர் மீது பயங்கர தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ
காரைக்காலை சேர்ந்த மருத்துவர் ஞானமணி என்பவர் அம்பகரத்தூரில் தனியார் கிளினிக்கை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லேப் உரிமையாளரான பஷீர் என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணியின் கிளினிக் உள்ளே நுழைந்து அவரை தாக்கியதோடு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தாங்கள் செய்தது தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாக தாக்குதல் நடத்தியவர்கள் வீடியோ வெளியிட்டனர். அதேநேரம் அவர்களை கண்டிக்கும் வகையில் ஜமாத்தார்கள் அவர்களை தாக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது..
Next Story