"ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் அல்ல".. போப் பிரான்சிஸ் விளக்கம்
ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் அல்ல... அதை குற்றம் என்பது சொல்வதே தவறு என்று போப் பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று ஒரு நேர்காணலின் போது ஓரினச்சேர்க்கை ஒரு பாவம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஓரினச்சேர்க்கை பிரச்சினை கத்தோலிக்க திருச்சபையில் நவீனத்துவவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின் போது தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரிய அமெரிக்க பாதிரியார் ஜேம்ஸ் மார்ட்டினுக்கு போப் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தான் திருமணம் தாண்டிய பாலியல் உறவைத் தான் பாவம் என்று குறிப்பிட்டதாகவும், ஓரினச்சேர்க்கை என்பது குற்றமில்லை.
அதைக் குற்றம் என்று சொல்வது தான் தவறு என்று போப் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story