புனிதப்படுத்தும் புனித வெள்ளி... கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு | Good Friday | church
இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்தபடி கொல்கொதா மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மலை உச்சியில் அவரை சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்ததை நினைவு கூரும் வகையில் கடலூரில் பங்கு தந்தைகள் சிலுவையைச் சுமந்து வந்தனர். பின்னர் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது.
புதுச்சேரில் இயேசுவின் துதிப் பாடல்களை பாடியபடி சிலுவை பாதை நிகழச்சி நடத்தப்பட்டது... இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் உவரியில் புனித அந்திரேயா ஆலயத்தின் முன்பு ஒன்று கூடிய பக்தர்கள் வியாகுல மாதாவின் மடியில் வைக்கப்பட்டுள்ள ஏசுவின் சொரூபத்தை கைகளால் தொட்டு வழிபட்டனர். திருச்சிலுவை பாதையில் உவரி பங்கு இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் துண்டத்து விளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புனித கருணை மாதா மலைக்கு மக்கள் திரு சிலுவை பயணம் மேற்கொண்டனர்.
இந்த பயணத்தின் போது ஏசுவின் சிலுவை பாடுகள் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜேஸ்குமார் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.