“நீங்களே பூட்டி வச்சிகோங்க..“- “டேப்பை பிடிச்சு அளங்க..“- சர்வேயரை கடிந்த ஆட்சியர்

x

தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு சாத்தான்குளம் அருகே அரசூர், நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேரிக்காட்டு பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண் ஊருக்குள் காலி நிலம் நிறைய இருக்கும் போது கால்வாயை தனது தோட்டம் வழியாக செல்வது போல அமைக்க இருப்பதால் நிலத்தை கொடுக்க மறுப்பதாக கூறினார். இதையடுத்து வரைபடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கால்வாய் செல்லும் பாதையை அளந்து குறியீடு வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது அதிகாரிகளிடம் பதிலளிக்கவில்லை . இதையடுத்து சர்வேயரை அழைத்து கண்டித்த மாவட்ட ஆட்சியர் டேப்பை பிடித்து அளந்து மார்க் செய்ய உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்