பத்திரிக்கை அடித்து.. ஊரையே கூட்டி சீர்வரிசையுடன் தடபுடலாக நாய்க்கு நடந்த திருமணம்
ஹரியானாவில் குழந்தை இல்லாத தம்பதியர் தாங்கள் ஆசையாக வளர்த்து வரும் நாய்க்கு ஊரையே கூட்டி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும் குழந்தை இல்லா தம்பதியர் ஒருவர் மூன்று வயதான பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
அதே பகுதியில் 8 வயதான ஆண் நாயை ஒன்னொரு குடும்பம் வளர்த்து வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த இரு குடும்பமும் சம்பந்திகளாகி இருப்பது தான் இணையத்தை கவர்ந்த ருசிகர நிகழ்வாக மாறி போய் உள்ளது.
சுவீட்டி என்ற தங்களின் பெண் நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த தம்பதியர், பத்திரிகை அடித்து ஊரையே கூட்டி, தடபுடலாக இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர்.
Next Story